இராஜபாளையம் பகுதியில் பனங்கிழங்கு சாகுபடியில் இந்த ஆண்டு நல்ல விளைச்சல்
பனங்கிழங்குடன் விவசாயி உள்ளார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் சொக்கநாதன் புத்தூர், பகுதிகளில் பனை ஏறும் தொழிலாளர் குடும்பங்கள் ஏராளமானோர் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தைப்பொங்கல் திருநாளில் பாரம்பரியமாக மக்கள் பனங்கிழங்கு வகைகளை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் பனை விவசாயிகள் பனை மரத்திலிருந்து பெறப்படும் பனம் பழத்தை மீண்டும் பூமியில் விதைத்து 3 மாதங்கள் கழித்து எடுக்கும் போது பனங்கிழங்கு வகைகள் உருவாகிறது.
நிலப்பரப்பிற்க்கு அடியில் விளையும் மஞ்சள் நிற பனங்கிழங்கு வகைகள் சுவை அதிகமாகவும், பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இவை உடலுக்கு குளிர்ச்சி தன்மையும், செறிமான தன்மையையும் வழங்குகிறது. மேலும் இரும்பு சத்து நிறைந்து காணப்படுவதால் உடலுக்கு வலுசேர்க்கிறது.
நிலத்துக்கடியில் இருந்து பனங்கிழங்கை பிரித்தெடுக்கும் பொழுது விதையிலிருந்து கிடைக்கும் தவின் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
இந்த ஆண்டு நல்ல பருவமழை பொழிவு காரணமாக பனங்கிழங்கு விளைச்சல் அதிகமாக உள்ளது எனவும் பொங்கல் பண்டிகைக்காக மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் நல்ல லாபம் கிடைக்கிறது என இப்பகுதி பனை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு பனை விவசாயிகள் பனங்கிழங்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu