இராஜபாளையம் அருகே கயிறு தயாரிக்கும் தேங்காய் நாரில் தீ விபத்து

இராஜபாளையம் அருகே கயிறு தயாரிக்கும் தேங்காய் நாரில் தீ விபத்து
X

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர். 

இராஜபாளையம் அருகே அசையாமணி விலக்கு பகுதியில் கயிறு தயாரிக்கும் தேங்காய் நாரில் தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் அசையாமணி விலக்கு பகுதியில் தவமணி என்பவர் சொந்தமாக கயிறு திரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். கயிறு திரிக்க பயன்படும் தேங்காய் நார்களில், நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த ராஜபாளையம் தீயணைப்பு துறை மீட்பு படையினர், சுமார் 2 மணி நேரம் மேலாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் புகை மூட்டம் நிலவியது. சுமார் 2 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார்கள் எரிந்து சேதமானது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சேத்தூர் காவல் நிலைய போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!