ராஜபாளையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மினி மாரத்தான் போட்டி

ராஜபாளையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மினி மாரத்தான் போட்டி
X

ராஜபாளையத்தில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட மாணவிகள்.

சுற்றுச் சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ராஜபாளையத்தில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இயங்கும் தன்னார்வ அமைப்பு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

சுற்றுச் சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த போட்டியில், அப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

17 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான சூப்பர் சீனியர் மற்றும் 13 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான ஜூனியர் போட்டிகள் தனித் தனியாக நடத்தப்பட்டது. பள்ளி எதிரே இருந்து தொடங்கிய போட்டிகளை சிறப்பு விருந்தினர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

முடங்கியாறு சாலையில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அய்யனார் கோயில் அடிவாரம் வரை போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களுடன் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

Tags

Next Story