குடி போதையில் பக்கத்து வீட்டுக்காரர் காதை கடித்தவர் கைது

குடி போதையில் பக்கத்து வீட்டுக்காரர் காதை கடித்தவர் கைது
X

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே குடி போதையில் நடந்த தகராறில் பக்கத்து வீட்டுக்காரரின் காதை கடித்து துப்பிய நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே மலையடிப்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் குடி போதையில் தனது உறவினர்களுடன் தகாத வார்த்தைகளால் பேசி சண்டையிட்டுக் கொண்டிருந்த போது, இதனை தட்டிக்கேட்ட அதே பகுதியை சேர்ந்த மாரியப்பனுடன் தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் மாரியப்பன் காதை, ராமமூர்த்தி கடித்து துப்பியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த மாரியப்பன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ராமமூர்த்தி மற்றும் உறவினர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare