இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர்கள் நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர்கள் நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்
X

இராஜபாளையம் ESI மருத்துவமனையில மருத்துவர் செவிலியர்கள் நியமனம் செய்ய கோரி AlTUC சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இராஜபாளையம் ESI மருத்துவமனையில மருத்துவர், செவிலியர்கள் நியமனம் செய்ய கோரி AlTUC சார்பில் ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ESI மருத்துவமனையில் நடக்கும் சீர்கேடுகளை நடவடிக்கை எடுக்க கோரி AITUC மில் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச் செயலாளர் விஜயன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் CPI மாவட்ட செயலாளர் லிங்கம். AITUC மாவட்ட அமைப்புச் செயலாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இராஜபாளையம் ESI மருத்துவமனையில் படுக்கை வசதி இன்றி நோயாளிகள் அவதி பட்டு வருவதாகவும் ESI மருத்துவமனையை முழுநேர மருத்துவமனையாக மாற்ற கோரியும், ஊசி மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். இராஜபாளையம் ESI மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் உடனே நியமனம் செய்ய வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் அதிகமாக உள்ள சிவகாசியில் பட்டாசு வெடி விபத்துகள் அதிகம் ஏற்பட்டு காயங்களுடன் சிகிச்சைக்குச் செல்லும் ESI மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் அதிகளவில் நியமனம் செய்ய வேண்டும். அவசர சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் செலவு செய்த பணத்தை நான்கு ஆண்டுகளாக வழங்காமல் இழுத்தடிப்பதை நிறுத்தி கொண்டு அந்த பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழ் தெரியாத வடமாநிலத்தவர் களை ESI மருத்துவமனை அலுவலகப் பணிகளில் நியமனம் செய்து அவர்களுக்கு தமிழ் தெரியாத நிலையில் தொழிலாளர்கள் தமிழில் பேசும் போது அவர்கள் இந்தியில் பேசும் போது இருவருக்கும் புரிதல் இல்லாமல் சில நேரங்களில் வாக்குவாதங்கள் ஏற்படுகிறது. தொழிலாளர்கள் சொல்லக்கூடிய கருத்துக்களை அவர்கள் புரிந்து கொள்ளாததால் பல பிரச்சனை ஏற்படுவதால் தமிழ் தெரிந்தவர்களை அலுவலகப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!