இராஜபாளையத்தில் 104 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

இராஜபாளையத்தில் 104 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

கொரோனா தடுப்பூசி முகாம்.

தளவாய்புரம் பகுதிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை எம்எல்ஏ தங்கப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 104 இடங்களில் கொரனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தளவாய்புரம் பகுதிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பேசிய எம்எல்ஏ இப்போது புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதால் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டுமென பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி ஜனவரி 10 ம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு முதல்கட்டமாக பூஸ்டர் ஊசி போடப்படவுள்ளது எனக் கூறினார்.

இந்நிகழ்வில் தலைமை மருத்துவர் கருணாகபிரபு, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார், கிளை செயலார் தங்கமணி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future