இராஜபாளையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தின கொடியேற்று விழா
இராஜபாளையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தின கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது
இராஜபாளையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தின கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தின விழாவில், மாவட்ட செயலாளர் முன்னாள் எம்பி லிங்கம் கலந்து கொண்டு கட்சிக்கொடியை ஏற்றிவைத்து பேசியதாவது: கடந்த1925 ம் ஆண்டு டிசம்பர் 26ல் உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது.
தொழிலாளர்கள் விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் மற்றும் அனைத்து பகுதி மக்களின் உரிமைக்காகவும் நாட்டின் ஒற்றுமை ஒருமைபாட்டை காத்திடவும் சமூக அரசியல் பொருளாதார உரிமைக்காவும் சமத்துவ சமதர்ம சமுதாயம் படைத்திடவும் இந்திய தேசத்தின் பூரண விடுதலையை முன்னெடுத்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டு பல்வேறு சதி வழக்குகளை சந்தித்து, மூலதன ஆதிக்க குவியலை எதிர்த்து, சாதி மத சுரண்டலுக்கு எதிராக போராடி மார்க்சீய தத்து வார்த்த வழியின் லெனிய பாதையில் வந்த கட்சி 97 வருடங்களாக பணியாற்றி வருகிறது. நாடு முழுவதும் ஏழை எளிய மக்கள் அமைப்பு தினத்தை கொண்டாடி வருகிறார்கள் என்றார் அவர்
இந் நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் S.வீராச்சாமி துணை செயலாளர் கணேசமூர்த்தி நகர செயலாளர் அய்யணன், ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் பகத்சிங் ,வரதராஜன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu