/* */

தொழிலதிபரை கட்டிப்போட்டு 80 பவுன் நகை கொள்ளை

தொழிலதிபரை கட்டிப்போட்டு 80 பவுன் நகை கொள்ளை
X

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தொழிலதிபரை கட்டிப்போட்டு விட்டு 80 பவுன் நகை மற்றும் 4 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பி.எஸ்.கே நகர் பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி ராஜா மகன் நாராயண ராஜா. இவரது மனைவி ஜமுனா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இத்தம்பதி வெளியூரில் வசித்து வருகின்றனர். இவர்கள் தனியாக இருப்பதை அறிந்த ஐந்து மர்ம நபர்கள் வயதான தம்பதியை கட்டிப் போட்டுவிட்டு அவர்களை கத்தியை காட்டி மிரட்டி, பீரோவில் நகை, பணம் எங்கு உள்ளது என கேட்டு பீரோவைத் திறந்து 80 பவுன் நகை மற்றும் 4 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு இவர்களை கட்டிப் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.இவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார், இராஜபாளையம் டிஎஸ்பி., நாகசங்கர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவத்தை அடுத்து விருதுநகரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மோப்ப நாய் உதவியுடன் கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் .இவர்கள் வீட்டில் சிசிடிவி கேமரா இல்லாததால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வயதான தம்பதியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த சம்பவம் இராஜபாளைத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 13 April 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?