பாஜக தந்திர அரசியல் செய்து வருகிறது : விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர்

பாஜக தந்திர அரசியல் செய்து வருகிறது : விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர்
X

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம்  தாகூர்

காங்கிரஸ் கட்சி பொறுத்தவரை 5 மாநில தேர்தலில் நான்கு மாநிலங்களில் மிகப் பெரிய வெற்றி பெறும். என்றார்

பாஜக தந்திர அரசியல் செய்து வருகிறது என்றார் விருதுநகர் பாரளுமன்ற தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: பாஜக தந்திர அரசியல் செய்து வருகிறது. பாஜக தமிழகத்தில் அரசியலானது பணத்தை வைத்துக்கொண்டு செய்து வருகின்றனர். பணத்திலும், சாவிலும் தமிழகத்தில் அரசியல் செய்கின்றனர். அமித் ஷாவின் அரசியலை தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த ஹிஜாப் நிகழ்வு குறித்து, தனசேகரனின் மனைவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பாஜக மாநில நிர்வாகி 2லட்சம் பணம் கொடுத்து இவ்வாறு செய்ததாக தெரிவித்தார். இதனை அவமதித்து பேசுகின்ற பொன்ராதாகிருஷ்ணன் தரம் தாழ்ந்து இருப்பதாகவும், அவர்கள் போடும் வேஷங்கள் இப்பொழுது தெளிவாக தெரிகிறது , சங்கியாக பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சி பொறுத்தவரை 5 மாநில தேர்தலில் நான்கு மாநிலங்களில் மிகப் பெரிய வெற்றி பெறும். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பொருத்தமட்டில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வேலைகளிலும் முன்னின்று செய்து வருகின்றது. பாஜகவை வீழ்த்துவதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்றார் எம்பி மாணிக்கம்தாகூர்.


Tags

Next Story
பவானி வர்த்தக மையத்தில் புதிய பாக்கு சீசன் தொடக்கம்