விருதுநகர் மத்திய மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

விருதுநகர் மத்திய மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
X

விருதுநகர் மத்திய மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

விருதுநகர் மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் உள்ளாட்சி தேர்தலை பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது .மத்திய மாவட்ட செயலாளர் பயில்வான் சந்தோஷ் குமார் தலைமை தாங்கினார்.

சந்தோஷ்குமார் ஆலோசனை கூட்டத்தில் பேசியபோது வருகின்ற உள்ளாட்சி தேர்தலில்அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நாம் கடுமையாக உழைத்து நமது வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும், மேலும் இந்தப் பகுதியில் 2 ஒன்றிய செயலாளர்கள் நியமிப்பதற்கு தலைமை முடிவெடுத்துள்ளது. புதிய ஒன்றிய செயலாளர்களின் ஆலோசனைகளை கேட்டு கட்சியை மேன்மேலும் வளர்த்து பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை 2026 -ல் முதல் அமைச்சராக ஆக்குவதற்க்கு பாடுபட வேண்டும். மேலும் அனைத்து கிளைகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடிக்கம்பங்கள் அமைக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணிசெயலாளர் கவிதா, மாவட்ட துணைச்செயலாளர் மாரிச்சாமி மற்றும் ஒன்றிய இணை, துணை நிர்வாகிகள் கிளைகழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!