இராஜபாளையத்தில் அமமுக வேட்பாளர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு

இராஜபாளையத்தில் அமமுக வேட்பாளர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு
X

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் 32 வது வார்டு அமமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன்.

இராஜபாளையத்தில் அமமுக வேட்பாளர்கள் பொதுமக்களை சந்தித்து உற்சாகமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சியில் உள்ளாட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்தலை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் 21 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் 32 வது வார்டு உறுப்பினராக போட்டியிடும் அமமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன் மாரியம்மன் கோவில்தெரு, மங்காபுரம், முத்தன் தெரு, கோதண்டராமர் சாமி கோவில் தெரு , நேதாஜி தெரு,உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொது மக்களை சந்தித்து பிரஷர் குக்கர் சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தார்.

உடன் அமமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் 32வது வார்டு பகுதியில் கழிவு நீர் கால்வாய் வசதி மற்றும் சாலை வசதிகள் மேலும் நகராட்சி சார்பில் வரும் நிதிகளை பல்வேறு நலத்திட்ட வசதிகள் செய்து தருவேன் என உறுதியளித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!