அம்பேத்கர் நினைவு தினம்: ராஜபாளையத்தில் வி.சி.கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

இராஜபாளையத்தில் அம்பேத்கர் 66வது நினைவு நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சியினர் அம்பேத்கர் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இராஜபாளையத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சியினர் அம்பேத்கர் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு தென்காசி சாலையில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொகுதி செயலாளர் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் சீனிவாசன் ஒன்றிய செயலாளர் முத்து கந்தன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் தமிழ்வளவன் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் கே.பி.ராஜேந்திரன், கே.ரமேஷ், வே.ரமேஷ் ,தொகுதி துணைச்செயலாளர் செ.ஊமத்துரை, அ.ரஞ்சித்குமார், சேத்தூர்பிச்சை, மற்றும் முன்னணி தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். மேலும் சர்ச் தெரு அம்பேத்கர் இளைஞர் அணி சார்பாக இளைஞர்களும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu