ராஜபாளையத்தில் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக மரியாதை

ராஜபாளையத்தில் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக மரியாதை
X

ராஜபாளையத்தில் எம்ஜிஆர்  நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

ராஜபாளையத்தில் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் முன்னால் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 24வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அதிமுக நகர ஒன்றியம் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் மற்றும் நகர் கழக செயலாளர்கள் துரைமுருகேசன், பரமசிவம் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் பகுதி அண்ணாசிலையில் இருந்து அமைதியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

சத்திரபட்டி சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். உடன் மாவட்ட இணை செயலாளர் அழகுராணி, மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ், பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வனராஜ், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நவரத்தினம், பேரூர் கழக செயலாளர்கள் பொன்ராஜ் பாண்டியன் , அங்கு துரை, நகரமகளீர் அணிசெயலாளர் ராணி மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக எம்ஜிஆர் திருவுருவ சிலை முன் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி கழகம் காப்போம் என அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி