ராஜபாளையத்தில் எம்ஜிஆர் 105-வது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் மரியாதை

ராஜபாளையத்தில் எம்ஜிஆர் 105-வது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் மரியாதை
X

ராஜபாளையத்தில் எம்ஜிஆர் 105-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

ராஜபாளையத்தில் எம்ஜிஆர் 105-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 105வது பிறந்த நாள் முன்னிட்டு, அதிமுக நகர ஒன்றியம் கழகம் சார்பில் விழா கொண்டாடப்பட்டது.

வடக்கு நகர கழக செயலாளர் துரைமுருகேசன் மற்றும் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சத்திர பட்டி சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நவரத்தினம், மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் ,மாவட்ட இணைச்செயலாளர் அழகுராணி, நகர மகளீர் அணிசெயலாளர் ராணி ,மற்றும் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள், முன்னால் கவுன்சிலர்கள்,மகளிர் அணியினர் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கழகம் காப்போம் எனவும், உள்ளாட்சியில் இராஜபாளையம் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற அயராது உழைப்போம் என அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!