ராஜபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு
X

இரு சக்கர வாகணத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த வாலிபர் விநாயமூர்த்தி.

ராஜபாளையம் அருகே இனாம்கோவில்பட்டி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் தவறி விழுந்து உயிரிழப்பு. போலீசார் விசாரணை.

ராஜபாளையம் அருகே இனாம்கோவில்பட்டி சாலையில் இரு சக்கர வாகணத்தில் சென்ற நபர் தவறி விழுந்து உயிரிழப்பு. சேத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் கட்டபொம்மன் சிலை தெரு பகுதியில் விநாயக மூர்த்தி என்பவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் சண்டையிட்டு தனது இருசக்கர வாகனத்தில் சிவலிங்கபுரம் செல்வதற்காக இனாம் கோவில்பட்டி சாலையில் பயணம் செய்த போது தானாகவே தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

தகவலறிந்து வந்த சேத்தூர் காவல்துறையினர் விநாயகமூர்த்தியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சேத்துர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!