100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ரத ஊர்வலம்

100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ரத ஊர்வலம்
X

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ரத ஊர்வலம் நடைபெற்றது.

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ரத ஊர்வலம் நடைபெற்றது. கலெக்டர் கண்ணன் கலந்து கொண்டு ரத ஊர்வலத்தை துவக்கி வைத்தார். உடன் டிஎஸ்பி.,நாகசங்கர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அவசியத்தை வலியுறுத்தி 3 ரதங்களில் பதாகைகள் மற்றும் போலீசார், மோட்டார்பைக்கில் பதாகைகள் ஏந்தி முக்கிய வீதி வழியாக பழைய பஸ்ஸ்டாண்ட், காந்திசிலை, காந்தி கலைமன்றம், பஞ்சு மார்க்கெட் வரை ஊர்வலமாக சென்றனர்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர்,வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராஜபாளையம் நகரில் மூன்று ரதங்கள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்கள் தவறாது கலந்துகொண்டு 100 சதவீத வாக்குப்பதிவு ஏற்படுத்த வேண்டுமென கலெக்டர் கேட்டுக்கொண்டார் .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!