வேலைக்கு சென்ற வாலிபர் மர்ம உயிரிழப்பு- உறவினர்கள் புகார்

வேலைக்கு சென்ற வாலிபர் மர்ம உயிரிழப்பு- உறவினர்கள் புகார்
X

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் காகித அட்டை தயாரிக்கும் கம்பெனி வேலைக்கு சென்ற வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் இறந்தவரின் உறவினர்கள் சாலைமறியல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம்(45). இவர் இராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள தனியார் அடடை கம்பெனியில் கடந்த 20 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் வேலைக்கு சென்ற நிலையில் கீழே தவறி விழுந்து விட்டார். தொடர்ந்து அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்ற பொழுது அங்கு சிதம்பரம் இல்லை.

ஆனால் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது சிதம்பரத்தின் உடலை வீட்டில் போட்டுவிட்டு கம்பெனி ஊழியர்கள் சென்றுள்ளார்கள். சிதம்பரம் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். உண்மையை மறைக்கும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி உறவினர்கள் இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!