தீ விபத்து- 1 லட்சம் மதிப்புள்ள வைக்காேல் நாசம்

தீ விபத்து- 1 லட்சம் மதிப்புள்ள வைக்காேல் நாசம்
X

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் வைக்கோல் படப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவரம்பட்டி கல்யாணசுந்தரனார் தெருவில் வசித்து வரும் ரெங்கசாமி என்பவர் கால்நடைதீவனத்திற்காக வைக்கோல் சேமித்து வைத்துள்ளார். இன்று நண்பகல் நேரத்தில் திடீரென வைக்கோல் படப்பில் தீப்பற்றியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து தண்ணீர் கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்ததும் ராஜபாளையம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்ததில், குறுகலான தெரு பகுதியில் வைக்கோல் சேமித்து வைக்கப்பட்டிருந்ததால் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத நிலையில் குடியிருப்பு பகுதியில் கிடைக்கும் நீரினை கொண்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து சாம்பலானது. மேலும் இது குறித்து வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!