கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின் பற்றாத கடைகளை பூட்டி சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள்.

கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின் பற்றாத கடைகளை பூட்டி சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள்.
X
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக பின் பற்றாத 4 பலசரக்கு கடைகளை பூட்டி சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள், கடையின் உரிமையாளர்களுக்கு ரூ. 13 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

ராஜபாளையத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் காந்தி சிலை அருகே இருந்த தனியார் சந்தையில் பலசரக்கு, பழக்கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதிலும் கூட்ட நெரிசலை தடுக்க பழக் கடைகளை, முறை வைத்து ஒருநாள் விட்டு ஒரு நாள் திறக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனாலும் சந்தையில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் சரிவர கடைபிடிக்கப்படுவதில்லை என நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனை அடுத்து நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் தலைமையில், நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் தனிமனித இடைவெளி இல்லாமல் வியாபாரம் செய்த கடைகள், இடைவெளியில் மக்கள் நிற்பதற்கு ஏதுவாக கட்டம் வரையாமல் வியாபாரம் செய்த கடைகள் என 4 கடைகளை பூட்டிய அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத பலசரக்கு கடை உரிமையாளர்களுக்கு ரூ. 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் 12 மணிக்கு மேல் வியாபாரம் செய்த கடைகளுக்கு சென்ற அதிகாரிகள், இதே நிலை தொடர்ந்தால் கடைகள் சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil