சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கலெக்டர் வலியுறுத்தல்

சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கலெக்டர் வலியுறுத்தல்
X

விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கலெக்டர் மேகநாதரெட்டி அறிவுரை

திருந்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021-2022 சம்பா பருவத்தில் மக்காச்சோளம், சிறுதானியங்கள், பயறு வகைகள், பருத்தி, எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் உடனடியாக காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் குறுவை 2016 பருவம் முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம்மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில், தற்போது மிதமான முதல் கன மழை பெய்து வரும் நிலையில், பயிர்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் அனைவரும் வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பொது சேவை மையங்கள் மூலமாக பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம்.

பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு மக்காச்சோளம் பயிருக்கு ரூ. 411/- , சோளம் ரூ. 117/- , கம்பு ரூ. 139/-, ராகி ரூ.155/- , பாசிப்பயறு, உளுந்து, துவரை பயிர்களுக்கு ரூ.199/- பருத்தி ரூ.452/-, நிலக்கடலை ரூ.288/-, எள் ரூ.111/- சூரியகாந்தி ரூ.177/- மற்றும் கரும்பு பயிருக்கு 2600/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் கடைசி நேர தாமதத்தை தவிர்த்து உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு கொத்தமல்லி பயிருக்கு ரூ.546/- , மிளகாய் ரூ.964/- , வெங்காயம் ரூ.1631/- மற்றும் வாழை பயிருக்கு ரூ.3265/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 2021-22 ம் ஆண்டின் நடப்பு சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள்

உளுந்து மற்றும் பாசிப்பயறு வகைகளுக்கு 15.11.2021

மக்காச்சோளம், கம்பு, ராகி, துவரை மற்றும் பருத்தி பயிர்களுக்கு 30.11.2021

சோளம் பயிருக்கு 15.12.2021;

நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி பயிர்களுக்கு 31.12.2021;

எள் பயிருக்கு 31.01.2022

கரும்பிற்கு 31.08.2022 வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள்

கொத்தமல்லி பயிருக்கு 15.12.2021, மிளகாய் பயிருக்கு 31.12.2021, வெங்காயம் மற்றும் வாழை பயிர்களுக்கு 31.01.2022 எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதல் போன்ற பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு பயிர்களுக்கான காப்பீடை அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு