குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் உரிமங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி
விருதுநகர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியினை விரைவுபடுத்திட ஒற்றை சாளர முறையில் அனைத்து வகையான உரிமங்கள் மின் இணைப்புகள், ஒப்புதல்கள் ஆகியவற்றை பெற வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
தொழிற்கூடங்கள் நிறுவுவதற்கு தேவையான அனைத்து வகையான உரிமங்கள், மின் இணைப்புகள், ஒப்புதல்கள், தடையின்மை சான்றிதழ்கள் ஆகியவற்றை அரசுத் துறைகள், நிறுவனங்களிடமிருந்து உடனுக்குடன் பெற்றுக்கொள்ள, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 'ஒரு முனை தீர்வுக் குழு" செயல்பட்டு வருகிறது. இக்குழு மூலம் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனுமதி உரிமங்கள் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் தொழில் முனைவோர்கள் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். எனவே குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உரிமங்களையும் www.tnswp.com என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
அரசு ஆணைப்படி புதிய தொழிற்கூடங்கள் நிறுவுவதற்கு தேவையான துறை சார்ந்த அனைத்து வகையான உரிமங்கள், ஒற்றை சாளர முறை வழியாக மட்டுமே வழங்கப்பட வேண்டும். இதை அத்துறை சார்ந்த தலைமை அலுவலர்கள் உறுதிபடுத்த வேண்டும். புதிய தொழில் முனைவோர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி சான்றிதழ்கள் மற்றும் உரிமங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் (04562-252739, 252308) என்ற முகவரியில் அணுகி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu