விருதுநகர்: அதிமுக -1, திமுக-6 தொகுதிகளில் வெற்றி

விருதுநகர்: அதிமுக -1, திமுக-6 தொகுதிகளில் வெற்றி
X

விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் ஒரே ஒரு தொகுதியில் (திருவில்லிபுத்தூர்) மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது, 6 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

விருதுநகர்

விருதுநகரில் திமுக வேட்பாளர் சீனிவாசன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்

அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பாண்டுரங்கனை 21,339 வாக்குகள் வித்யாசத்தில் தோற்கடித்தார்.

வாக்குகள் விவரம்:

திமுக : 73,297

பாஜக : 51958

வாக்குகள் வித்யாசம் : 21,339

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் 39,034 வாக்குகள் வித்யாசத்தில் அதிமுக வேட்பாளர் வைகை செல்வனை தோற்கடித்தார்.

வாக்குகள் விவரம் :

திமுக : 91,040

அதிமுக : 52,006

வாக்குகள் வித்தியாசம் : 39,034

திருச்சுழி

திருச்சுழி தொகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு 61,002 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் ராஜசேகரை தோற்கடித்தார்.

வாக்குகள் விவரம் :

திமுக : 1,02225

அதிமுக : 41223

வாக்குகள் வித்யாசம் : 61,002

சாத்தூர்

சாத்தூர் தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட ரகுராமன் 11,179 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரனை தோற்கடித்தார், இந்த தொகுதியில் கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் மீண்டும் சீட்டு வழங்காததால் அமமுகவில் இணைந்து சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு 32, 916 வாக்குகள் பெற்றுள்ளார்.

வாக்குகள் விவரம்:

மதிமுக : 74,174

பாஜக : 62,995

அமமுக : 32,916

வாக்குகள் வித்யாசம் : 11,179

சிவகாசி

சிவகாசி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அசோகன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் லட்சுமி கணேசனை 17,319 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

வாக்குகள் விவரம் :

காங்கிரஸ் : 78,947

அதிமுக : 61,628

வாக்குகள் வித்யாசம் : 17,319

இராஜபாளையம்

இராஜபாளையம் தொகுதியில் திமுக சார்பில் 2வது முறையாக போட்டியிட்ட தங்கபாண்டியன் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை 3789 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்

வாக்குகள் விவரம் :

திமுக : 73,780

அதிமுக : 69,991

வாக்குகள் வித்யாசம் : 3786

திருவில்லிபுத்தூர்

திருவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மான் ராஜ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவை 12,738வாக்குகள் வித்யாசத்தில் தோற்கடித்தார்

வாக்குகள் விவரம் :

அதிமுக : 70,475

காங்கிரஸ் : 57,737

வாக்குகள் வித்யாசம் : 12,738

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!