குலதெய்வ கோவிலில் அமைச்சர் சுவாமி தரிசனம்

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் குலதெய்வ கோவிலான ஸ்ரீ தவசிலிங்கம் சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழகம் முழுவதும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் அமைந்துள்ள பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் குலதெய்வ கோவிலான ஸ்ரீ தவசிலிங்கம் சுவாமி திருக்கோவிலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தவசிலிங்கம் சுவாமிக்கு 11 சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிறப்பு பூஜையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இந்த சிறப்பு பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai healthcare technology