வளவனூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் - தொழிலாளி கைது

வளவனூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் -  தொழிலாளி கைது
X
வளவனூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

வளவனூர் பக்கமேடுவை சேர்ந்தவர் ஏகாம்பரம் மகன் முத்து (வயது 26) விவசாய கூலித்தொழிலாளி. இவர் 11-ம் வகுப்பு படித்து வரும் 16 வயதுடைய சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார்

இதில் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், உடனே விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி, முத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!