விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
விழுப்புரம் கலெக்டர் மோகன்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் - மாம்பழப்பட்டு - திருக்கோவிலூர் சாலையில் அரகண்டநல்லூர் பேரூராட்சி எல்லையில் உள்ள சிறிய பாலம் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மேலும், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து பாதிப்புக்குள்ளாகியது.
இந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டும் பணி நாளை மறுநாள்(வியாழக்கிழமை) முதல் வருகிற ஜூன் 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது. பாலம் கட்டும் பணி முடியும்வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, திருக்கோவிலூரிலிருந்து விழுப்புரம் செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் பச்சையம்மன் கோவில் அருகில் உள்ள இந்திரா நகர் வழியாக விழுப்புரம் செல்ல வேண்டும்.
திருக்கோவிலூரிலிருந்து விழுப்புரம் செல்லும் 4 சக்கர வாகனங்கள் திருக்கோவிலூர்- வேட்டவலம் சாலையில் வலது புறத்தில் உள்ள சிமெண்ட் சாலை (தேவனூர்) வழியாக சென்று ரெயில்வே சுரங்க பாதை, வெள்ளம்புத்தூர், திருமலைப்பட்டு மற்றும் வடகரை தாழனூர் சாலை வழியாக விழுப்புரத்துக்கு செல்ல வேண்டும்.
விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் வரும் 4 சக்கர வாகனங்கள் விழுப்புரம் -திருக்கோவிலூர் சாலையில் வலது பக்கத்தில் பிரிந்து வடகரைதாழனூர் சாலை, திருமலைப்பட்டு சாலை வழியாக வெள்ளம்புத்தூர் ரெயில்வே சுரங்க பாதை மற்றும் தேவனூர் வழியாக திருக்கோவிலூர் - வேட்டவலம் சாலையில் இணைந்து திருக்கோவிலூர் செல்ல வேண்டும்.
விழுப்புரத்திலிருந்து அரகண்டநல்லூர் வழியாக திருக்கோவிலூர் செல்லும் பேருந்துகள் அரகண்டநல்லூரில் நிறுத்தப்பட வேண்டும். அதேபால் திருக்கோவிலூரிலிருந்து அரகண்டநல்லூர் வழியாக விழுப்புரம் செல்லும் பஸ்கள் அரகண்டநல்லூரில் நிறுத்தப்பட வேண்டும்.
திருக்கோவிலூரிலிருந்து விழுப்புரம் செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் கடலூர்-திருக்கோவிலூர்-சங்கராபுரம் சாலையில் அரசூர் வழியாக விழுப்புரம் செல்ல வேண்டும்.
விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் வரும்பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அரசூர் வழியாக கடலூர் - திருக்கோவிலூர்- சங்கராபுரம் சாலையில் திருக்கோவிலூர் செல்ல வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu