விழுப்புரம் நகரை தூய்மையாக வைக்க நகராட்சி தலைவர் வேண்டுகோள்

விழுப்புரம் நகராட்சியில் துப்புரவு பணிகளை தொடங்கி வைத்த நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி
விழுப்புரம் நகரப்பகுதிகளில் ஒருங்ணைந்த துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் முதல் கட்டமாக விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் திரவுபதி அம்மன் ஆலயம் அருகே குப்பைகளை அகற்றும் பணியினை நகராட்சி தலைவர் தமிழ்செல்வி தொடங்கிவைத்தார். அதன் பின்னர் ஆரயம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வந்ததை பார்த்து, உடனடியாக அந்த குழாய்களை மாற்ற சீரமைக்க உத்தரவிட்டார்.
மேலும் அக்கோவிலில் திருவிழா நடப்பதால், பக்தர்கள் அதிகமாக வருவதை கருத்தில் கொண்டு உடனடியாக அடிப்படை வசதிகளை செய்ய உத்தரவிட்டார்.
அதன் பின்னர் கண்ணகி தெருவில் கொசு மருந்து அடிப்பதை நேரில் பார்வையிட்டார். ஊரல் குட்டை பகுதியான சன் சிட்டியில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவருடன் 6வது வார்டு கவுன்சிலர் மகாலட்சுமி வைத்தியநாதன் உடனிருந்தார்.
பின்னர் காமராஜர் வீதி, தந்தை பெரியார் தெரு, மகாத்மா காந்தி சாலை, பாகர்ஷா வீதி போன்ற வீதிகளில் தூய்மை பணிகளையும் தொடங்கி வைத்தார். அந்த பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடம் குப்பைகளை சாலைகளில் போடாமல், துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வரும்போது அவர்களிடம் கொடுத்து விழுப்புரம் நகரில் தூய்மைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டு கொண்டார். இப்பகுதிகளின் வார்டு கவுன்சிலர் பத்மநாபன் உடனிருந்தார்.
இப்பணியில் ஒவ்வொரு பகுதி பணிக்கும் 30க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களும் 9 வாகனங்களும் பயன்படுத்தபட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu