மிஸ் கூவாகம் 2022 அழகிப்போட்டி: குலுங்கிய விழுப்புரம் நகரம்
விழுப்புரம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவிற்கு வந்துள்ள திருநங்கைகள்
இந்தியாவிலுள்ள திருநங்கைகள் மத்தியில் புகழ் பெற்ற புண்ணியத்தலமாக விளங்கக்கூடியது கூத்தாண்டவர் கோயில். தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம், மடப்புரம் அருகே கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளுக்கான தனி தெய்வமாகிய கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. விழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படையலிட்டு மாவிளக்கு ஏற்றியும் வழிபட்டனர். நேற்று கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இன்று மாலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மிஸ் கூவாகம் 2022 அழகிபோட்டி நடைபெற உள்ளது. இதில் கலைநிகழ்ச்சிகள், அணிவகுப்பு, தனித்திறன்போட்டிகள், கல்வி, வேலைவாய்ப்பில் சிறந்து விளங்கிய திருநங்கைகளுக்கு சான்று அளித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் அமைச்சர் பொன்முடி, நடிகர் சூரி, நடிகை நளினி உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்கின்றனர்.
அழகிபோட்டியையொட்டி விழுப்புரத்தில் ஏராளமான திருநங்கைகள் திரண்டுள்ளனர். இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu