திமுக பொய்யான தகவல்களை பரப்புகிறது , அமைச்சர் சண்முகம்

திமுக பொய்யான தகவல்களை பரப்புகிறது , அமைச்சர் சண்முகம்
X

திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளும் , தகவல்களையும் பரப்பி வருகின்றனர் என அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரத்தில் பேசினார்.

விழுப்புரம் சட்டக்கல்லூரி கூட்ட அரங்கில் இன்று சுமார் 417 பயனாளிகளுக்கு ரூ. 5 கோடியே 25 லட்சம் மதிப்பில் கூட்டுறவுத்துறை சார்பாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்குதல்,அம்மா இருசக்கர வாகனம், மற்றும் பல்வேறு துறைகளின் சார்பாக அரசு நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் சிவி சண்முகம், ஆளே இல்லாமல் திரையை (காணொளி காட்சி மூலம்) பார்த்து மட்டுமே கூட்டம் நடத்தி வருகின்றனர் திமுகவினர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார் மேலும் பொங்கல் பரிசு ரூ. 5400 கோடி 2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 5 லட்சத்து 85 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு ரூ. 156 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளும் , தகவல்களையும் மக்களிடம் பரப்பி வருகின்றனர் என்றார்.

Tags

Next Story