விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் லட்சதீபத்திருவிழா

விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் லட்சதீபத்திருவிழா
X

விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் குளம்

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப திருவிழா இன்று தொடங்குகிறது

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப திருவிழா இன்று தொடங்குகிறது. இதனை தொடர்ந்து வருகிற 18-ந் தேதி வரை தினமும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவில் சாமிவீதி உலாவும், முக்கிய நிகழ்ச்சியாக 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவில் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

இதையொட்டி தற்போது தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. குளத்தை சுற்றிலும் இருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டு குளத்தின் சுவர்களில் வர்ணம் தீட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மேலும் குளத்தில் தேங்கியிருந்த மாசடைந்த தண்ணீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டு மின் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு லட்சதீப திருவிழா நடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளத்தில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான எச்சரிக்கை பலகை குளத்தின் அருகில் கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!