விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை
X

மாதிரி படம் 

கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட இயந்திரம் மூலம் மின்னணு வண்ண வாக்காளர் அட்டையினை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள தேர்தல் கணினி பிரிவு அறையில் நவீன இயந்திரம் மூலம் மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டையினை வாக்காளர்களுக்கு, கலெக்டர்.மோகன் வழங்கி தொடங்கி வைத்தார்.

முதன்மைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அறிவுறுத்தலின்படி, விழுப்புரம் மாவட்டத்திற்குட்ப்பட்ட வாக்காளர்கள் வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு, மின்னணு வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட இயந்திரம் மூலம் மின்னணு வண்ண வாக்காளர் அட்டையினை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தேர்தல் இணையதள முகவரியான http://www.nvsp.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, தங்களது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வரப்பெற்ற குறுஞ்செய்தியுடன் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கணினி பிரிவில் காண்பித்து வாக்காளர் அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai powered agriculture