சின்னசேலம் ஒன்றியத்தில் தேர்தல் மன்னன் பத்மராஜன் 4 பதவிகளுக்கு மனுத்தாக்கல்

சின்னசேலம் ஒன்றியத்தில் தேர்தல் மன்னன் பத்மராஜன் 4 பதவிகளுக்கு மனுத்தாக்கல்
X

 பத்மராஜன்.

சின்னசேலம் ஒன்றியத்தில் மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் 4 பதவிகளுக்கு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் (வயது 60) பத்மா டயர் ஒர்க்ஸ் என்ற கடை வைத்துள்ளார். 1988 முதல் தொடர்ந்து 30 ஆண்டுக்கும் மேலாக தேர்தல்களில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்.

இந்திய அளவில் பல தலைவர்களை எதிர்த்தும் தேர்தலில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் மன்னன் என அழைக்கப்படும் பத்மராஜன் கள்ளகுறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியத்தில் 112வது வார்டு மாவட்ட கவுன்சிலர், பி.அலம்பலம் பஞ்சாயத்து தலைவர், அதே ஊர் வார்டு உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கு ஒரே நேரத்தில் மனு தாக்கல் செய்தார்.

இவர் 225வது முறையாக தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்து குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!