விழுப்புரம் நகராட்சி சார்பில் மீன் அங்காடி கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் நகராட்சி சார்பில் மீன் அங்காடி கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்.

விழுப்புரம் அனிச்சம் பாளையம் சாலையில் ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மீன் அங்காடி கட்டிடங்களை கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்

விழுப்புரம் அனிச்சம்பாளையம் சாலையில் ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மீன் அங்காடி கட்டிடங்களை கலெக்டர் மோகன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வருகின்ற 5-ந் தேதி முதல்-அமைச்சர் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தரும்போது புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார். எனவே பணிகளை கால தாமதமின்றி திட்டமிட்ட காலத்திற்குள் முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது விழுப்புரம் நகரமன்ற தலைவர் சக்கரை தமிழ்ச் செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகராட்சி பொறியாளர் ஜோதிமணி, நகரமன்ற கவுன்சிலர்கள் பத்மநாபன், பத்மாவதி, நகர தி.மு.க. செயலாளர் சக்கரை உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்