/* */

விழுப்புரம் நகராட்சி பூங்காவில் தூய்மைப்பணி நடைபெற்றது

விழுப்புரம் நகராட்சி பூங்காவில் முட்புதர்கள் அகற்றப்பட்டு நகராட்சி பூங்கா முழுவதையும் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது

HIGHLIGHTS

விழுப்புரம் நகராட்சி பூங்காவில் தூய்மைப்பணி நடைபெற்றது
X

விழுப்புரம் நகராட்சி பூங்கா தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது

விழுப்புரம் நகராட்சி பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு திடல் மற்றும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான வசதிகள் உள்ளன. இந்த பூங்கா கடந்த சில மாதங்களாக முறையாக பராமரிக்கப்படாமல் பொலிவிழந்து காணப்பட்டது. அதுமட்டுமின்றி பூங்காவினுள் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர்களாக காட்சியளித்தது.

இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்களை கொண்டு ஒருங்கிணைந்த தூய்மைப்பணி மூலம் பூங்காவை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது முட்புதர்கள் அகற்றப்பட்டு நகராட்சி பூங்கா முழுவதையும் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது

இந்த தூய்மைப்பணிகளை நகரமன்ற தலைவர் சக்கரை தமிழ்ச்செல்வி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பூங்காவை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Updated On: 25 March 2022 3:56 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  3. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  4. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  5. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  6. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  9. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. அருப்புக்கோட்டை
    அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டிய அமைச்சர்!