சாலையில் கிடந்த பணம், போலீசில் ஒப்படைத்த மாணவர்

சாலையில் கிடந்த பணம், போலீசில் ஒப்படைத்த மாணவர்
X

விழுப்புரத்தில் சாலையில் கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகன் குமரகுரு (14). இவர் அங்கு உள்ள பள்ளியில் எட்டாம்வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட செல்வதற்காக சுங்கச்சாவடி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதிக்கு சென்றார். அப்போது சாலையோரம் கீழே ரூபாய் நோட்டுகள் இருந்ததை பார்த்துள்ளார். மொத்தம் ரூ. 21 ஆயிரத்து 700 இருந்தது தெரியவந்தது.

உடனே அதனை எடுத்துக்கொண்டு அவர் வீட்டுக்குச் சென்று, போலீசில் ஒப்படைக்குமாறு அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அவரது தாயார் ஹேமலதாவை அழைத்துக்கொண்டு விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் அந்த தொகையை ஒப்படைத்தார். சிறுவனின் நற்குணத்தை அறிந்த மாவட்ட எஸ்.பி., ராதாகிருஷ்ணன், மாணவரை பாராட்டி சால்வை அணிவித்து புத்தகங்கள் வழங்கி வாழ்த்தினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!