விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்
X

மறைந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி

முதலமைச்சர் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் மயங்கி விழுந்த விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்

விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார். 71 வயதான அவர் கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பின் 2021ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.ஆவானார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், 10 நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

அவருக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டதிருப்பதாக தகவல் வெளியானது. இந்த சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் அவர் சென்னையில் இருந்து வீடு திரும்பினார். அதன்பின் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற திமுக தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்றார்.

முதலமைச்சர் கூட்டத்திற்கு வரும் முன்பு ஓய்வு அறையில் அமைச்சர் பொன்முடி, வேட்பாளர் விஷ்ணுபிரசாத், எம்.எல்.ஏ. புழகேந்தி ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது புகழேந்திக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

உடனடியாக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், இன்று காலை அவர் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா