விக்கிரவாண்டியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விக்கிரவாண்டியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

வடகுச்சிப்பாளையம்  பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது

விக்கிரவாண்டியை அடுத்த வடகுச்சிப்பாளையத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது

விக்கிரவாண்டியை அடுத்த வடகுச்சிப்பாளையத்தில் பெரிய ஏரி உள்ளது. 88 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 15 ஹெக்டேர் பரப்பளவை விவசாயிகள் ஆக்கிரமித்து பயிர் சாகுபடி செய்தனர்.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் தாசில்தார் இளரவசன் தலைமையில், வருவாய் ஆய்வாளர் ராஜேஷ், பொதுபணித்துறை உதவிபொறியாளர் வித்யேஷ்வர், கிராம நிர்வாக அலுவலர் இளந்திரையன், உதவியாளர் சதீஷ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கலியபெருமாள், துணைத்தலைவர் மலர்விழி பாலு ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் விவசாயிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!