விழுப்புரத்தில் சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

விழுப்புரத்தில் சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
X

சமத்துவபுரத்தை திறந்துவைத்து பெரியார் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

வானூர் அருகே அமைந்துள்ள சமத்துவபுரத்தில் அமைந்துள்ள கலைஞர் பூங்கா, விளையாட்டு திடல், ரேசன் கடையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கொழுவாரி ஊராட்சி பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் வீடுகள் 100 கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகளை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விழுப்புரம் வந்தார்.

இன்று காலை கொழுவாரி ஊராட்சி பகுதியில் ரூ.2.88 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்தார். அங்குள்ள உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பசுமை தோட்டங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியார் உருவ சிலையையும் திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து சமத்துவபுரத்தில் அமைந்துள்ள கலைஞர் பூங்கா, விளையாட்டு திடல், ரேசன் கடையை திறந்து வைத்தார்.

Tags

Next Story
ai solutions for small business