திருக்கோவிலூரில் தொற்று கணக்கெடுப்பு: ஆர்.டி.ஓ. நேரில் ஆய்வு

திருக்கோவிலூரில் தொற்று கணக்கெடுப்பு: ஆர்.டி.ஓ. நேரில் ஆய்வு
X

மாதிரி படம்

திருக்கோவிலுார் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அறிகுறி கண்காணிப்பு பணியை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்

திருக்கோவிலுார் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அறிகுறி கண்காணிப்பு பணியை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் தொற்று அறிகுறி கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் சங்கரன் மேற்பார்வையில் பேரூராட்சி மற்றும் சுகாதார பணியாளர்கள் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை ஆர்.டி.ஓ., சாய்வர்த்தினி ஆய்வு செய்தார். ஆய்வின்போது செயல் அலுவலர் செல்லப்பிள்ளை, வருவாய் ஆய்வாளர் சிட்டிபாபு உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!