இருளர் குடியிருப்பு மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய அமைச்சர் பொன்முடி .

இருளர் குடியிருப்பு மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய அமைச்சர் பொன்முடி .
X

நிவாரண உதவிகளை வழங்கும் அமைச்சர் பொன்முடி 

திருக்கோவிலுாரில் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் குடியிருப்பை பார்வையிட்ட அமைச்சர் பொன்முடி நிவாரண உதவிகளை வழங்கினார்

வடகிழக்கு பருவமழை காரணமாக திருக்கோவிலுார், சந்தப்பேட்டை இருளர் குடியிருப்பில் குடிசைகள் சேதமடைந்தன. அமைச்சர் பொன்முடி அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் அத்திப்பாக்கத்தில் மழையால் வீடு இடிந்ததால் வீடிழந்தவருக்கு ஆறுதல் கூறி அரசின் நிவாரண உதவித் தொகையை வழங்கினார். தொடர்ந்து மணம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளையும் பார்வையிட்டார்.

அமைச்சருடன் கலெக்டர் ஸ்ரீதர், ஆர்டிஓ. சாய்வர்தினி, வட்டாட்சியர் குமரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!