முருகன் கோவிலில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம்

முருகன் கோவிலில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.15 ஆயிரத்துக்கு ஏலம்
X

ரத்தினவேல்முருகன் கோவிலில் வேலில் குத்தி வைக்கப்பட்ட எலுமிச்சை பழம் ஏலம் விடப்பட்டது

திருவெண்ணெய்நல்லூர் அருகே ரத்தினவேல்முருகன் கோவிலில் வேலில் குத்தி வைக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை பலர் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரத்தினவேல்முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 11 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர விழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முதல் 9 நாட்கள் நடைபெற்ற விழாவின்போது முருகன் சிலையில் உள்ள வேல் மீது ஒவ்வொரு நாளும் ஒரு எலுமிச்சை பழம் குத்தி வைக்கப்பட்டது.

எலுமிச்சை பழத்தை ஏலத்தில் வாங்குவோரின் குறைகள் நீங்கும், வியாபாரம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை இதற்காக வேலில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சை பழங்கள் பத்திரமாக சேகரித்து வைக்கப்பட்டது. 11-ம் நாள் திருவிழா அன்று இரவு 9 எலுமிச்சை பழங்களும் ஏலம் விடப்பட்டது.

இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, திருச்சி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். குறிப்பாக திருமணம் ஆகாதவர்கள், குழந்தை இல்லாத தம்பதியினர், வியாபாரிகள் பங்கேற்றனர். இதில் முதல் நாள் எலுமிச்சை பழம் ரூ.13 ஆயிரத்துக்கும், 2-வது நாள் எலுமிச்சை பழம் ரூ.4 ஆயிரத்து 200-க்கும், 3-வது நாள் எலுமிச்சை பழம் ரூ.11 ஆயிரத்துக்கும், 4-வது நாள் எலுமிச்சை பழம் ரூ.4 ஆயிரத்து 100-க்கும், 5-வது நாள் எலுமிச்சை பழம் ரூ.7 ஆயிரத்துக்கும், 6-வது நாள் பழம் ரூ.6 ஆயிரத்துக்கும், 7-ம் நாள் பழம் ரூ.15 ஆயிரத்து 200-க்கும், 8-ம் நாள் பழம் ரூ.3 ஆயிரத்து 900-க்கும், 9-ம் நாள் பழம் ரூ.5 ஆயிரத்து 600-க்கும் ஏலம் போனது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி