திருவெண்ணைநல்லூர் பகுதியில் தொடரும் மணல் திருட்டு

திருவெண்ணைநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சவுந்தரராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கெடிலம் ஆற்றில் அனுமதியின்றி 2 மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டு வந்த திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள வாணியம் குப்பம் பகுதியை சேர்ந்த விஜயகுமார், அய்யனார் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதேபோன்று திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அந்தராயநல்லூர் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் அந்தராயநல்லூர் பகுதியில் ரோந்து செல்லும் போது கெடிலம் ஆற்றில் அனுமதியின்றி 3 மாட்டு வண்டியில் மணல் அள்ளி கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் 5 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
இதில் ராமமூர்த்தி (49) என்பவரை போலீசார் பிடித்து திருவெண்ணைநல்லூர் காவல்நிலையத்தில் மாட்டு வண்டியுடன் ஒப்படைத்தனர். இதுகுறித்து ராமமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். தொடர்ந்து திருவெண்ணநல்லூர் பகுதியில் மணல் திருட்டு அதிக அளவில் நடந்து வருவது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu