ரெயில்வே மேம்பால சீரமைப்பு பணி: திண்டிவனத்தில் போக்குவரத்து மாற்றம்

ரெயில்வே மேம்பால சீரமைப்பு பணி:  திண்டிவனத்தில் போக்குவரத்து மாற்றம்
X
விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பாலத்தின் கீழ் பகுதி சாலை வழியாகச் செல்ல வேண்டும்

திண்டிவனம் நகரில் ரெயில்வே மேம்பாலம் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படவுள்ளன. அதன்படி, புதுச்சேரியிலிருந்து செஞ்சி, திருவண்ணாமலை செல்லும் வாகனங்கள் பாலத்தின் கீழ் பகுதியிலுள்ள அணுகு சாலை (சர்வீஸ் சாலை) வழியாகச் சென்று, இடதுபுறம் திரும்பி திண்டிவனம் ஆய்வு மாளிகைப் பகுதியில் வலது புறமாகச் சென்று கிடங்கல் சாலை வழியாக நேரு வீதியை அடைய வேண்டும்.

புதுச்சேரியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் பாலத்தின் கீழ் பகுதியில் அணுகுசாலை வழியாகச் சென்று இடது புறம் திரும்பி, திண்டிவனம் ஆய்வு மாளிகை பகுதியில் வலது புறமாக பாலத்தின் கீழே சென்னை செல்லும் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.

திண்டிவனம் நகர்ப் பகுதியிலிருந்து மேம்பாலம் வழியாக புதுச்சேரி செல்லும் வாகனங்கள், பாலத்தின் மேலுள்ள சுற்றுவட்ட சாலை (ரவுண்டானா) பகுதியில் இடதுபுறம் திரும்பி, பாலத்தின் முடிவில் வலது புறமாகத் திரும்பி புதுச்சேரி செல்லும் அணுகு சாலை வழியாகச் செல்ல வேண்டும்.

சென்னை வழி பாலப்பணியின்போது, புதுச்சேரியிலிருந்து மேம்பாலம் வழியாக சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் புறவழிச்சாலை வழியாகச் செல்ல வேண்டும். விழுப்புரம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பாலத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ள சாலை வழியாகச் செல்ல வேண்டும். செஞ்சி, திருவண்ணாமலை பகுதியிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் நகரில் உள்ள செஞ்சி பேருந்து நிறுத்தத்திலிருந்து சலவாதி சாலை வழியாகச் செல்ல வேண்டும்.

செஞ்சி, திருவண்ணாமலை பகுதிகளிலிருந்து புதுச்சேரி, விழுப்புரம் செல்லும் வாகனங்கள் நகரில் செஞ்சி பேருந்து நிறுத்தத்திலிருந்து சலவாதி சாலை வழியாகச் சென்று எம்.ஆர்.எஸ் கதவு வழியாக மேம்பாலத்தின் கீழ் பகுதியில் செல்ல வேண்டும்.

விழுப்புரம் வழி பாலப்பகுதி பணியின்போது, விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை வழியாகச் செல்ல வேண்டும். விழுப்புரத்திலிருந்து செஞ்சி செல்லும் வாகனங்கள் அனைத்தும் கிடங்கல் டேங்க் சாலை வழியாக நேரு வீதியை அடைய வேண்டும். செஞ்சி, திருவண்ணாமலை பகுதிகளிலிருந்து விழுப்புரம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பாலத்தின் மேல்புற ரவுண்டானாவில் இடதுபுறம் திரும்பி, பாலத்தின் முடிவில் வலது புறமாக திரும்பி பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள சாலை வழியாகச் செல்ல வேண்டும்.

செஞ்சி வழி பாலப்பணியின்போது, புதுச்சேரியிலிருந்து செஞ்சி நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் அணுகுசாலை வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி, திண்டிவனம் காவல் நிலையப் பகுதியில் வலதுபுறமாகத் திரும்பி கிடங்கல் டேங்க் சாலை வழியாகச் செல்ல வேண்டும். விழுப்புரத்திலிருந்து செஞ்சி நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் கிடங்கல் டேங்க் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.

செஞ்சி, திருவண்ணாமலை பகுதிகளிலிருந்து மேம்பாலம் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் செஞ்சி பேருந்து நிறுத்தத்திலிருந்து சலவாதி சாலை வழியாக சென்னை தேசிய நெடுஞ்சாலையை அடைய வேண்டும். செஞ்சி, திருவண்ணாமலை பகுதிகளிலிருந்து புதுச்சேரி, விழுப்புரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் செஞ்சி பேருந்து நிறுத்தத்திலிருந்து சலவாதி சாலை வழியாக எம்.ஆர். எஸ் கதவு சென்று மேம்பாலத்தின் கீழ் பகுதியிலுள்ள சாலை வழியாகச் செல்ல வேண்டும் என போக்குவரத்துக் காவல், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி