மரக்காணத்தில் கடல்நீர் புகுந்ததால் உப்பளங்களில் மூழ்கியது

கடல்நீர் புகுந்ததால் பாதிக்கப்பட்டுள்ள உப்பளம்
தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் மரக்காணம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் டன்னுக்கு மேலாக உப்பு உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
கடந்த 2 வருடங்களாக கொரோனா, பருவமழை போன்ற பாதிப்பால் உப்பு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது. தற்பொழுது உப்பு உற்பத்திக்கு ஏற்ற சூழல் உருவானதால், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் உப்பளங்களில் உப்பு உற்பத்தி செய்யும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது.
இந்த சமயத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக மரக்காணம் கடலில் சீற்றம் அதிகமாக ஏற்பட்டதால், முகத்துவாரம் வழியாக கடல் நீர் உட்புகுந்தது. இதனால் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள இருந்த உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகின.
கடந்த 2 வருடம் கழித்து உப்பு உற்பத்தி பணி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் பருவ நிலைமாற்றம் காரணமாக கடல் நீர் உட்புகுந்து உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியது உப்பு உற்பத்தியாளர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu