மரக்காணம் பெரியார் நினைவு சமத்துவபுரம் 5-ந்தேதி திறப்பு

மரக்காணம் பெரியார் நினைவு சமத்துவபுரம் 5-ந்தேதி திறப்பு
X

சமத்துவபுரம் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா ஆய்வு செய்தார்

மரக்காணம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்-அமைச்சர் ஸ்டாலின் 5-ந்தேதி திறந்து வைக்கிறார்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பெரிய கொழுவாரி ஊராட்சியில், ஊரக வளர்ச்சி துறை சார்பில் புதிதாக பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது. இங்கு கழிவறை, மழைநீர் சேகரிப்பு, குடிநீர் குழாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் விழா வருகிற 5-ந் தேதி நடைபெற உள்ளது.

பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்து வீடுகளை பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார். மேலும் ஊரக வளர்ச்சி துறை, மகளிர் திட்டம் மற்றும் பல்வேறு துறைகள் மூலம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார்.

Tags

Next Story