சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
விழுப்புரம் ஆட்சியர் பழனி
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ரூ.2 கோடியும் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ரூ.2 கோடி அளவிலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு கடன்கள் வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி, ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்க சிறப்பு லோன் மேளாக்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கியின் கிளைகளில் நடைபெறும்.
- விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியில் 17ம் தேதியும்,
- திண்டிவனம் கூட்டுறவு நகர வங்கியில் 18ம் தேதியும்,
- வானூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் 22ம் தேதியும்,
- விக்கிரவாண்டிதொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் 24-ம் தேதியும்,
- மரக்காணத்தில் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் 25ம் தேதியும்,
- செஞ்சிதொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் 29ம் தேதியும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது.
மகளிருக்கான சுய உதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது
.கடன் விண்ணப்பங்களானது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கியின் கிளைகளிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலும் கிடைக்கும். முகாமில் கலந்து கொள்ள வரும் முன்பே விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து எடுத்து வர வேண்டும்.
கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் , திட்ட அறிக்கை, ஒட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் (கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) இச்சிறப்பு லோன் மேளாக்களில் கலந்து கொண்டு கடன் உதவி பெற்று பயனடையலாம் என கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu