புத்தாண்டு கொண்டாட்டம்: விழுப்புரம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு
புத்தாண்டு கொண்டாட்டம் (கோப்பு படம்)
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31.12.2023 அன்று இரவு பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாடும் வகையில் கீழ்க்காணும் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
1 ) 31.12.2023 அன்று இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
2) நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது.
3) புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 1000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
4) விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
5) மதுபானம் அருந்தி யாரும் வாகனம் ஓட்டக்கூடாது மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
6) இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்லவோ, சாகசம் செய்யவோ கூடாது, மீறினால் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
7) அனைத்து முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
8) கேளிக்கை விடுதிகளில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கலைநிகழ்ச்சியின் போது அதன் ஏற்பாட்டாளர்கள் மற்றும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
9) புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu