/* */

அமைச்சர் மஸ்தான் பேசிக்கொண்டிருக்கும்போதே மைக்கை பிடுங்கிய அமைச்சர் பொன்முடி

விழுப்புரத்தில் ரமலான் மாத நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசி கொண்டிருக்கும் போதே அமைச்சர் பொன்முடி மைக்கை பிடுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அமைச்சர் மஸ்தான் பேசிக்கொண்டிருக்கும்போதே மைக்கை பிடுங்கிய அமைச்சர் பொன்முடி
X

அமைச்சர் மஸ்தானிடமிருந்து மைக்கை புடுங்கும் அமைச்சர் பொன்முடி 

சமீப காலமாக அமைச்சர் மஸ்தான் மற்றும் அமைச்சர் பொன்முடி இடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாகவும், அமைச்சர் பொன்முடி இருக்கும் பொழுது விழுப்புரத்தில் நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் அமைச்சர் மஸ்தான் கலந்து கொள்ளக் கூடாது என மறைமுகமாக உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து புனித ரமலான் மாத நோன்பு திறக்கும் நிகழ்ச்சி விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மை மற்றும் வெளிநாடு நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருவதற்கு முன்பே தொடங்கிய நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசிக்கொண்டிருக்கும்போதே அமைச்சர் பொன்முடி உள்ளே வந்தார். அப்போது கட்சிக்காரர்கள் அமைச்சர் வருகிறார் சற்று பேச்சை நிறுத்துங்கள் என கூறினர். ஆனால் இதனைக் கண்டு கொள்ளாத அமைச்சர் மஸ்தான் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கவே, இதனால் கடுப்பாகச் சிறிது நேரம் அமர்ந்து இருந்த அமைச்சர் பொன்முடி பொறுமையை இழந்து அமைச்சர் மஸ்தான் பேசி முடிக்கும் முன்பே மைக்கை பிடுங்கினார்.

பிடுங்கியது மட்டுமல்லாது அமைச்சர் மஸ்தானை அமைச்சர் பொன்முடி கடுமையாகச் சாடினார். அமைச்சர் மஸ்தான் நான் இன்னும் பேசி முடிக்கவில்லை எனக் கூற அதற்கு அமைச்சர் பொன்முடி பேசாமல் உட்காருங்கள் எனக் கூறினார்.

இந்த நிகழ்வு அங்கு உள்ளவர்களை முகம் சுளிக்க வைத்தது. அதுமட்டுமின்றி நிகழ்ச்சி முடிந்து மேடையிலிருந்து கீழே இறங்கிய அமைச்சர் பொன்முடி ஆத்திரம் தாங்க முடியாமல் மறுபடியும் அமைச்சர் மஸ்தானைக் கடுமையாகத் திட்டினார். இதனைக் கண்ட தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேடையில் வைத்து அமைச்சர் மஸ்தானை அவமானப்படுத்தும் விதமாக மைக்கை பிடுங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Updated On: 3 April 2024 6:07 AM GMT

Related News