விழுப்புரம் மாவட்டத்துக்கு 7-ந் தேதி உள்ளூர் விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்துக்கு 7-ந் தேதி உள்ளூர் விடுமுறை
X
மேல்மலையனூர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற 7-ந் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் மாசி மாதத்தில் மகாசிவராத்திரி திருவிழா மற்றும் அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை விழா மற்றும் தேரோட்டம் விமர்சையாக கொண்டாடப்படும்.

குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன்கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று இரவு ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

அதுபோல் ஒவ்வொரு ஆண்டும் மயான கொள்ளை திருவிழா மற்றும் தேரோட்டம் மிக சிறப்பாக கொண்டாடப்படும். தேரோட்ட நிகழ்ச்சிக்கு தமிழகத்திலிருந்தும் மற்றும் தென் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து அம்மனைத் தரிசித்து தேரோட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

ஆகையால் மேல்மலையனூர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற 7-ந் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினத்தில் அரசு பள்ளி, கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது.

அந்தவேலை நாள் வருகின்ற 19-ந்தேதி செயல்படும் என மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!