செஞ்சி சிறுவர் பூங்கா: அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார்

செஞ்சி சிறுவர் பூங்கா: அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார்
X

செஞ்சி சிறுவர் பூங்காவை அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார்

செஞ்சி பேரூராட்சி சக்கராபுரம் குளக்கரை அருகில் உள்ள சிறுவர் பூங்காவை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி சக்கராபுரம் குளக்கரை அருகில் உள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி இருந்தது. செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவராக மொக்தியார் மஸ்தான் பொறுப்பேற்றவுடன் சக்கராபுரத்தில் உள்ள சிறுவர் பூங்காவை புனரமைக்கப்பட்டு சிறுவர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனதெரிவிக்கப்பட்டது.

அதன்படி சக்கராபுரம் சிறுவர் பூங்காவில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு சிறுவர் பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். வார்டு கவுன்சிலர் மோகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு சிறுவர் பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சங்கர், சிவகுமார், நூர்ஜகான் ஜாபர், உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா