மேல்மலையனூர்அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனூர்அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
X

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் 25 மாதங்களுக்கு பிறகு நடக்கிறது

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ம் வருடம் மார்ச் மாதத்திலிருந்து வெளிப்பிரகாரத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்ததை அடுத்து கடந்த 1-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை மாசிப் பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் மாதந்தோறும் அமாவாசை விழா அன்று இரவு வெளிப்பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடத்திக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அமாவாசை அன்று வெளிப்பிரகாரத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் நடைபெற உள்ளது.

25 மாதங்களுக்குப் பிறகு வெளியில் உள்ள ஊஞ்சலில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி